கார்த்திகை மாத (01) கார்த்திகை உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-11-2024 சனிக்கிழமை கார்த்திகை மாத (01) கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு, வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம் – வேல்நாயகம் புவிர்சா – அம்பன்

நிர்வாக சபையினர்

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 02-11-2024ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இவ்வருடம் கந்தஷஷ்டி விரதம் 02-11-24 சனிக்கிழமை கும்ப வைப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகி 07-11-24 வியாழக்கிழமை சூரன் போர் நிகழ்வுடன், ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.

02-11-2024 சனிக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக காலை 9.00 மணியளவில் கும்ப வைப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விரதம் அனுஷ்டிக்கும் மெய்யடியார்கள் நேரகாலத்திற்கு வருகைதந்து கும்பவைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விரத உத்தியானம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகம், விசேட பூஜாராதனைகள் நடைபெற்று கந்தபுராணப் (சூரபன்மன் வதைப்படலம்) படிப்பு நடைபெறும்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் பகல் பூஜாராதனைகள் நிறைவடைந்த பின்னர் சர்க்கரைத் தண்ணீர், ஆலய திருமடத்தில் அன்னதானம் என்பன நடைபெற்று பகல் நிகழ்வு நிறைவு பெறும்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று, மங்கல வாத்தியங்களுடன் வள்ளி தேவசேனா சமேத முருகையா சுவாமி அலங்கார ரூபமாய் எழுந்தருளி உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கந்தபுராணப் படிப்பு நடைபெற்று மாலை உற்சவம் நிறைவு பெறும்.

இவ்வாறாக தொடர்ந்து ஐந்து நாட்களும் உற்சவ நிகழ்வு நடைபெற்று கந்தஷஷ்டி விரத இறுதி நாளான 07-11-2024 வியாழக்கிழமை மாலை சூரசம்மார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

சூரசம்மார நிகழ்வைத் தொடர்ந்து ஆலயத்தில் பிராயச்சித்த அபிஷேகம், விஷேட பூஜை, கும்பச் சரிப்பு நிகழ்வு என்பன நடைபெற்று அன்றைய நிகழ்வு நிறைவு பெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் 08-11-2024 வெள்ளிக்கிழமை காலை 6-30 மணியளவில் பாரணை பூஜை நடைபெறும்.

திருக்கல்யாண உற்சவம்
08-11-2024 வெள்ளிக்கிழமை பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.00 மணியளவில் அபிஷேகம் நடைபெற்று விஷேட பூஜாராதனையுடன் தெய்வயானையம்மன் திருக்கல்யாண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான கந்தபுராணப் படிப்பு நடைபெறும்.

அன்றைய தினம் மாலை தெய்வானையம்மன் திருக்கல்யாண விழா வெகு கோலாகலமாக நடைபெற்று தொடர்ந்து எம்பெருமான் வெளிவீதி உலா வந்தருளுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சூரபன்பன் திக்கு விஜயம்
கந்தஷஷ்டி விரதோற்சவ ஐந்தாம் நாளன்று 06-11-2024 புதன்கிழமை மாலை 4.00மணியளவில் சூரபன்மன் திக்கு விஜயம் இடம்பெறும்

கந்தஷஷ்டி விரதோற்சவ நாட்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு நடைபெறும் அனைத்து விஷேட உற்சவ நிகழ்வுகளிலும் கலந்து எம்பெருமானின் திவ்விய தரிசனம் கண்டு தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

02-11-24 சனி- 1ம் நாள் – திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

03-11-24 ஞாயிறு – 2ம் நாள் – திரு. சி.ஈசுரபாதம் குடும்பத்தினர்- நாகர்கோவில் தெற்கு – திரு. தா.வல்லிபுரம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

04-11-24 திங்கள் – 3ம் நாள் – திரு. வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நாகர்கோவில் தெற்கு

05-11-24 – செவ்வாய் – 4ம் நாள் – திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

06-11-24 புதன் – 5ம் நாள் – திரு. மா.சாம்பசிவம் குடும்பத்தினர்- நாகர்கோவில் கிழக்கு

07-11-24 வியாழன் – 6ம் நாள் – சூரன் போர் – பொது

08-11-24 வெள்ளி – பாரணை பூஜை – பொது

08-11-24 வெள்ளிக்கிழமை – தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம் – திரு.வ.லோகராஜ் (நாள்சீட்டு) குழுவினர் நாகர்கோவில் வடக்கு

09-11-24 திங்கட்கிழமை – வைரவர் மடை – ஆலய பிரதம குரு திரு.மகேசக்குருக்கள்- அனலைதீவு

முருகையா அடியார்களே!
சூரசம்மார உற்சவ நிகழ்வு, பாரணை அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்குவதுடன், பாரணைக்குரிய அன்னதானப் பொருட்களை கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

விரதகாரர் கட்டணம் – 1.500 ரூபா

நிர்வாக சபையினர்

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
02-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கி.- வெள்ளி அபி.அன்ன- 40,000ரூபா
03-08- சந்திரலிங்கம் விஜயா- கனடா- வி.அபி.அன்ன.- 40,000ரூபா
03-08- வை.நமசிவாயம்-நா.கிழக்கு- எள்தீபம்- 200ரூபா
04-08- ந.செல்வராசா-நா.கிழக்கு- அமுது பூஜை- 1,000ரூபா
04-08- ஆடி அமாவாசை நெய்தீபம்- 2,000ரூபா
04-08- ஆடி அமாவாசை அர்ச்சனை – 1,400ரூபா
06-08- இ.சோதிமலர் ஞாபகம்- நோர்வே-வி.அபி.அன்ன.- 40,000ரூபா
06-08- இ.சோதிமலர்- நோர்வே- பிரசாத பூஜை- 5,000ரூபா
06-08- இ.சோதிமலர்- நோர்வே- நன்கொடை- 10,000ரூபா
06-08- செ.கமல்ராஜ்- சுவிஸ்- காளி உரு.அபி.- 8,000ரூபா
07-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- ஆடிப்பூர உற்சவம்- 30,000ரூபா
07-08- க.சிவபாதசுந்தரம்- பரு.-மேலதிக பிரசாதம்- 4,000ரூபா
07-08- ஆ.வசந்தகோகிலம்-நா.கி.- ஆடிப்பூர நன்கொடை- 1,000ரூபா
07-08- ந.செல்வராசா- நா.கி.- ஆடிப்பூர நன்கொடை- 500ரூபா
07-08- வை.நமசிவாயம்- பிரான்ஸ்- எள்தீபம்- 200ரூபா
09-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- வெள்ளி அபி.அன்.- 40,000ரூபா
10-08- ஜனனி கமலக்கண்ணன்-லண்.- சஷ்டி வி.பூஜை- 5,000ரூபா
10-08- வை.நமசிவாயம்- பிரான்ஸ்- நெய்தீபம்- 200ரூபா
13-08- ந.ஈசா- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
16-08- சி.நவீனநாயகம்- லண்டன்- வெள்ளி அபி.அன்.- 40,000ரூபா
16-08- வரலட்சுமி விரத காப்பு வரவு- 20,000ரூபா
16-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- பொங்கல் பூஜை- 20,080ரூபா
16-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- மாவிளக்கு- 2,000ரூபா
18-08- வளர்மதி மதிவதனன்- நோர்வே- ஆ.ஞாயிறு- 15,000ரூபா
18-08- ம.தங்கமலர்- அவுஸ்.- பிர.பூஜை- 5,000ரூபா
18-08- ம.தங்கமலர்- அவுஸ்.- காளி பிர.பூஜை- 2,500ரூபா
18-08- கௌரி நகுலேஸ்வரன்- லண்.- நடேசரபிஷேகம்- 8,000ரூபா
20-08- க.சிவபாதசுந்தரம்-பரு.துறை- காளி வி.பூஜை- 3,000ரூபா
21-08- தி.கிருஷ்ணமூர்த்தி- லண்டன்- பிர.பூஜை- 3,000ரூபா
21-08- தி.கிருஷ்ணமூர்த்தி- லண்டன்- காளி பிர.பூஜை- 3,000ரூபா
23-08- ஆ.பொன்னையா- நா.கி.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
23-08- ஜெ.மீனா- லண்டன்- கற்பூரச்சட்டி காணிக்கை- 500ரூபா
24-08- சி.தமயந்தி- அவுஸ்.- பிர.பூஜை- 3,000ரூபா
24-08- செ.வினோதினி- நா.மேற்கு- கற்பூரச்சட்டி- 1,000ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை-2,000ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
25-08- ராதிகா இராசசிங்கம்- நோர்வே- ஆவ. ஞாயிறு- 15,000ரூபா
26-08- சி.கலீபன்- நா.தெற்கு- காளி வி.பூஜை- 3,000ரூபா
26-08- பாலா ஜெயானி- அவுஸ்.- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
30-08- து.கந்தசாமி- கனடா- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
31-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- நெய்தீபம்- 400ரூபா
31-08- ந.நாராயணன்- லண்.- காளி வடை தேசி மாலை- 4,000ரூபா
31-08- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடை தேசி மாலை- 3,200ரூபா
31-08- ஆகஸ்ட் மாத அர்ச்சனை வரவு- 5,400ரூபா
31-08- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- நித்திய பூஜை- 30,000ரூபா
2024 ஆகஸ்ட் மாத மொத்த வரவு- 531,180ரூபா

செலவு
02-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
02-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
02-08- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
02-08- அபிஷேக பழவகை- 1,470ரூபா
02-08- அபிஷேக தேங்காய்-இளநீர்- 2,950ரூபா
02-08- வெள்ளி அன்னதானம்- 14,650ரூபா
02-08- காளி வடை தேசி மாலை- 750ரூபா
02-08- வெற்றிலை பாக்கு- 650ரூபா
02-08- நெய் சிட்டி வாங்கியது- 600ரூபா
02-08- வாகனக் கூலி- 400ரூபா
03-08- விஷேட அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
03-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
03-08- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
03-08- அபிஷேக பழவகை- 1,450ரூபா
03-08- அபிஷேக தேங்காய்-இளநீர்- 2,950ரூபா
03-08- விஷேட அன்னதானம்- 20,930ரூபா
03-08- வாகனக்கூலி- 400ரூபா
06-08- விஷேட அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
06-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
06-08- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
06-08- அபிஷேக பழவகை- 1,345ரூபா
06-08- அபிஷேக தேங்காய்-இளநீர்- 2,900ரூபா
06-08- காளி வடை தேசி மாலை- 700ரூபா
06-08- தேசிக்காய்- 250ரூபா
06-08- விஷேட அன்னதானம்- 20,185ரூபா
06-08- வாகனக்கூலி- 300ரூபா
06-08- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
06-08- காளி அபி.பிரசாதம்- 2,250ரூபா
07-08- ஆடிப்பூர உற்சவ குரு.தெட்சணை- 3,000ரூபா
07-08- ஆடிப்பூர அபிஷேக செலவு- 1,570ரூபா
07-08- ஆடிப்பூர பிரசாதம்- 2,250ரூபா
07-08- ஆடிப்பூர மேலதிக பிரசாதம்- 4,000ரூபா
07-08- அபிஷேக பழவகை- 1,000ரூபா
07-08- தேசிக்காய்- 500ரூபா
07-08- சாத்துப்படி அலங்காரம்- 5,000ரூபா
09-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
09-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
09-08- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
09-08- அபிஷேக பழவகை- 1,050ரூபா
09-08- அபிஷேக தேங்காய்-இளநீர்- 2,950ரூபா
09-08- வெள்ளி அன்னதானம்- 20,550ரூபா
09-08- காளி வடை தேசி மாலை- 750ரூபா
10-08- சஷ்டி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
10-08- சஷ்டி அபி.பிரசாதம்- 2,250ரூபா
10-08- சஷ்டி அபி.சந்தனக்காப்பு- 700ரூபா
13-08- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
13-08- காளி வடை தேசி மாலை- 700ரூபா
16-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
16-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
16-08- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
16-08- காளி வடை தேசி மாலை- 750ரூபா
16-08- வரலட்சுமி பூஜை குரு.தெட்சணை- 2,000ரூபா
16-08- வரலட்சுமி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
16-08- வரலட்சுமி விரதகாரர் பலகாரம்- 2,700ரூபா
16-08- பொங்கல் சாமான் – 11,580ரூபா
16-08- மாவிளக்கு- 2,000ரூபா
16-08- வாழைக்குலை- பழவகை- 6,000ரூபா
16-08- பிரசாத பூஜை(சுந்தரலிங்கம்)- 2,250ரூபா
18-08- ஆவணி ஞாயிறு உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
18-08- நடேசரபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
18-08- பிரசாத பூஜை(தங்கமலர்)- 4,500ரூபா
18-08- காளி பிர.பூஜை(தங்கமலர்)- 2,250ரூபா
20-08- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
20-08- காளி வடை தேசி மாலை- 700ரூபா
21-08- பிரசாத பூஜை(கிருஷ்ணமூர்த்தி)- 2,700ரூபா
21-08- காளி பிர.பூஜை(கிருஷ்ணமூர்த்தி)- 2,700ரூபா
23-08- வெள்ளி அபி.பிரசாத பூஜை- 2,250ரூபா
23-08- காளி வடை தேசி மாலை- 750ரூபா
24-08- பிரசாத பூஜை(தமயந்தி)- 2,700ரூபா
24-08- பிற.நாள் பிரசாத பூஜை(தர்சிகா)- 1,800ரூபா
25-08- ஆவணி ஞாயிறு உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
26-08- கார்த்திகை உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
27-08- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
27-08- காளி வடை தேசி மாலை- 700ரூபா
30-08- வெள்ளி அபி.பிரசாதம்- 2,250ரூபா
30-08- காளி வடை தேசி மாலை- 750ரூபா
31-08- ஆகஸ்ட் மா அபிஷேக பால்- 1,200ரூபா
31-08- ஆகஸ்ட் மா அபிஷேக மாலை- 6,000ரூபா
31-08- ஆகஸ்ட் மாத நித்திய வெற்றிலை பழம்- 1,000ரூபா
31-08- ஆகஸ்ட் மாத இன்ரநெற் பில்- 3,150ரூபா
31-08- ஆகஸ்ட் மாத குருக்கள் சம்பளம்- 24 நாள்- 24,000ரூபா
31-08- ஆகஸ்ட் மாத கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2024 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 289,580ரூபா

2024 ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 531,180ரூபா
2024 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 284,330 ரூபா

2024 ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு – 246,850 ரூபா

திருப்பணி அறிக்கையின் படி பற்றாக்குறை- 539,590ரூபா
ஆகஸ்ட் மாத கையிருப்பு- 246,850ரூபா

ஆகஸ்ட் மாத முடிவில் பற்றாக்குறை- 292,740ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்

ஐப்பசி மாத கார்த்திகை உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-10-2024 சனிக்கிழமை ஐப்பசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

சரஸ்வதி பூஜை உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருக்கும் வீரமகா காளியம்மனுக்கு, சரஸ்வதி பூஜையின் இறுதி நாளான 11-10-2024 வெள்ளிக்கிழமை உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading

பொது திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கை-2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் வருட  மஹோற்சவத்தின் பொதுத் திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மஹோற்சவ வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 18-08-2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024 திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஆடிப்பூரம் உற்சவம்! – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் வீர மகா காளியம்மனுக்கு எதிர்வரும் 07-08-2024 புதன்கிழமை ஆடிப்பூரம் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading