நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருமடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
ஆலய திருமடத்தை அமைப்பதற்கு அமரர் கதிரேசு சின்னையா மகள் இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பதை அடியார்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தோம்.
அதன் பிரகாரம் அவரது பெறாமகன் மார்க்கண்டு சிவகுருநாதன் அவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.. அவரைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அடியார்கள் அனைவராலும் அடிக்கல் நாட்டப்பட்டது..
அன்றைய தினம் முன்னதாக ஆலயத்தில் ஆனி உத்தர நடேசர் அபிஷேகம் – விசேட பூஜை என்பன சிறப்பாக நடைபெற்றது. அந்த உபயத்தை நாகர்கோவில் கிழக்கு க.சிவப்பிரகாசம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுச் செய்திருந்தனர்.
தற்போது ஆலய பூஜையை பழைய அர்ச்சகராக பணியாற்றிய நாகேஸ்வரக் குருக்களின் மூத்த மகன் நாகேந்திர சர்மா பொறுப்பேற்றுள்ளார்.
அடிக்கல் நாட்டும் பூமி பூஜையை ஆலய அர்ச்சகர் நாகேந்திர சர்மாவே நடத்தி வைத்தார்.