திருக்கார்த்திகை தீப உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 12-12-2016 திங்கட்கிழமை அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் மூலமூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கந்தவிரதப் படலம் புராண படனம் அடியார்களால் ஓதப்பட்டு உரை விளக்கம் தரப்படும்.

புராண படனம் பூர்த்தியடைந்தவுடன் விஷேட பூஜை நடைபெற்று வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு பூசாராதனை இடம்பெற்ற பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் அழகிய மயில்வாகனத்தில் உள்வீதி உலா எழுந்தருளுவார்.

தொடர்ந்து ஆலய வாசலில் சொக்கப்பானை எரிக்கும் காட்சியுடன் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

எம்பெருமான் அடியவர்கள் அன்றைய தினம் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யும் வண்ணம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உற்சவ உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் நாகர்கோவில் மேற்கு – லண்டன்

குறிப்பு
திருக்கார்த்திகை உற்சவத்தை தொடர்ந்து பிரதி மாதம்தோறும்  வரும் ஒவ்வொரு கார்த்திகை விரத உற்சவத்தையும் சிறப்பாக நடாத்துவதற்கு நிர்வாக சபையினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைவாக பிரதி மாத கார்த்திகை உற்வத்தை பொறுப்பேற்றுச் செய்ய விரும்பும் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியவர்கள் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உற்சவத்திற்குரிய செலவு தொகை – ரூபா இருபதினாயிரம் – 20,000ரூபா

இதுவரை பொறுப்பேற்றுள்ளவர்களின் பெயர் மற்றும் மாத விபரங்கள் 

கார்த்திகை – ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – நாகர்.மேற்கு
மார்கழி  –      செல்லத்துரை கமலேந்திரன் குடும்பம் – லண்டன்
தை    –           ஆறுமுகம் – மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா
மாசி   –
பங்குனி –
சித்திரை –
வைகாசி  –
ஆனி  –
ஆடி   –
ஆவணி  –   பாலா,  ஜெயானி நகை மாடம் – அவுஸ்திரேலியா
புரட்டாதி –
ஐப்பசி –        நடராசா – செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: