ஆலயத்தில் தங்கியுள்ள கதிர்காம யாத்திரிகர் குழு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய  உற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

52 நாட்கள் பாத யாத்திரையாக செல்லவுள்ள இந்த யாத்திரைக் குழுவினர் நேற்று முன்தினம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து தமது யாத்திரையை ஆரம்பித்தனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாத்திரைக் குழுவினர் நேற்று வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இடைத்தங்கியுள்ளனர்

.நாளை திங்கட்கிழமை அங்கிருந்து புறப்பட்டு வரவுள்ள கதிர்காம யாத்திரிகர் குழுவினர் நாளை இரவு தொடக்கம் மூன்று நாட்களுக்கு நாகர்கோவில் வடக்கு  அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இடைத்தங்கிச் செல்லவுள்ளனர்.

குறித்த யாத்திரிகர் குழுவினருக்கு வேண்டிய சகல வசதிகளையும்  ஆலய நிர்வாக சபையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

எதிர்வரும்  வியாழக்கிழமை வரை இடைத்தங்கிச் செல்லும் யாத்திரிகர் குழுவினரை வழியனுப்பும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.