முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் எம்பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

எம்பெருமானுடைய ஆலயத்தில் திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்ற அதேவேளை, வள்ளி, தெய்வானை சமேத எம்பெருமானுக்கு  தங்க ஆபரணங்கள்  செய்வதற்கு முருகையாவின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

கடந்த 18-05-2018 வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில்  எம்பெருமானுக்கு தங்க ஆபரணங்கள் செய்வதற்கு  உத்தேசித்துள்ளதாகவும்,  பொதுமக்களுக்கு அறிவித்து அவர்களின் ஒத்துழைப்புடன் அவற்றை செய்து போடுவதென்றும் எதிர்வரும் எம்பெருமானின் 3வது வருஷாபிசேக(மணவாளக்கோலம்) தினத்தன்று (06-09-2018) அவற்றை மூர்த்திகளுக்கு அணிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது சுமார் 6 பவுண் எடைகொண்ட 6 சிறிய சங்கிலிகள் அடியார்களால் ஆலயத்தில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.எனினும் அவைகள் சிறிய நகைகளாக இருப்பதால்  பாதுகாப்பு கருதி அவற்றை அணிவதற்கு நிர்வாக சபையினர் அனுமதிப்பதில்லை.

எனவே அவற்றையும் கொடுத்து பெரிய ஆபரணமாக செய்து கொள்ளலாம் என நிர்வாக சபைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதன் பேரில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முருகையாவுக்கு 10 பவுணிலும் வள்ளி, தெய்வானை இருவருக்கும் 5 + 5 பவுணிலும் பதக்கம் சங்கிலி செய்வதாக  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எம்பெருமானின் திருவாக்குப்படி உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தப் புனித கைங்கரியம் நிறைவேற முருகையாவின்  மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நன்கொடைகளை பணமாகவோ அல்லது நகையாகவோ வழங்கி  நிர்வாக சபையினருக்கு ஒத்துழைப்பு நல்கி முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு:- இது விடயம் சம்பந்தமாக ஆர்வமுள்ள அடியார்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆலோசனைகளை கீழ் குறிப்பிடும் நிர்வாக சபை உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

நா.குமரேசு
தலைவர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6701175

சி சிவாயநம,
பொருளாளர், தேவஸ்தான நிர்வாக சபை
தொ.இல. 0094 77 6685054

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு