மகோற்சவம் பற்றிய அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் முதலாவது வருட மகோற்சவத்தை  எதிர்வரும் ஜூன் மாதம்  நடாத்துவது என்று  தேவஸ்தான நிர்வாக சபையினரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

தேவஸ்தானத்தின் கும்பாபிஷேக விழாவை தலைமை தாங்கி நடாத்திய ச.மு.பாஸ்கரரவிக் குருக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் பிரகாரம் நிர்வாக சபையினரால் எதிர்வரும் 10-06-2020ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21-06-2020 தீர்த்தோற்சவத்துடன் 12 நாட்கள் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மகோற்சவ விபரம்.

09-06-2020 வியாழன் – சாந்தி, யாக பூஜை
10-06-2020 வெள்ளி – கொடியேற்றம்
11-06-2020 சனி – இரண்டாம் திருவிழா
12-06-2020 ஞாயிறு – மூன்றாம் திருவிழா
13-06-2020 திங்கள் – நான்காம் திருவிழா
14-06-2020 செவ்வாய் – ஐந்தாம் திருவிழா
15-06-2020 புதன் – கப்பல் திருவிழா
16-06-2020 வியாழன் – மாம்பழத் திருவிழா
17-06-2020 வெள்ளி – பக்தி முக்தி பாவனோற்சவம்
18-06-2020 சனி – வேட்டைத் திருவிழா
19-06-2020 ஞாயிறு – சப்பறத் திருவிழா
20-06-2020 திங்கள் – தேர்த் திருவிழா
21-06-2020 செவ்வாய் – சமுத்திர தீர்த்தோற்சவம், கொடியிறக்கம்
22-06-2020 புதன் – பூங்காவனம், திருக்கல்யாணம்
23-06-2020 வியாழன் – வைரவர் மடை

மகோற்சவம் தொடர்பாக கடந்த 27-01-2020ல் ஆலய மணிமண்டபத்தில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் தேர், தீர்த்தம் ஆகிய உற்சவங்களை பொதுவாக செய்வது உகந்தது என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக பொதுச்சபை அங்கத்தவர்களும் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை கடித மூலம் நிர்வாக சபையினருக்கு அறிவிக்கலாம்.

முக்கிய குறிப்பு
அருள்மிகு முருகையாவின் மகோற்சவம் நடைபெறவுள்ள இத்தருணத்தில் உற்சவங்கள் ஒவ்வொன்றையும் பொறுப்பேற்றுச் செய்ய விரும்பும் மெய்யடியார்கள் தனியாகவோ, குழுவாகவோ அல்லது ஊர் மக்கள் சேர்ந்தோ செய்யலாம்.

ஒவ்வொரு உற்சவங்களுக்குரிய செலவீனங்கள் பற்றிய கட்டண விபர அறிவித்தல் விரைவில் நிர்வாக சபையினரால் அறியத்தரப்படும்.

குறிப்பாக உற்சவங்களைப் பொறுத்து கட்டணங்கள் வேறுபடும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

முதலில் உற்சவங்களைப் பொறுப்பேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை ஆலய நிர்வாக சபையினரிடம் கூடிய விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு எம்பெருமான் மெய்யடியார்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்.