நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் (06.12.2022) திகதி செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மூலமூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து புராண படனம்(கந்தவிரதப் படலம்) ஆலய ஓதுவார்களினால் ஓதப்பட்டு உரை விளக்கம் தரப்படும்.
புராண படனம் பூர்த்தியடைந்தவுடன் மாலை 5.00 மணியளவில் விஷேட பூஜை நடைபெற்று, வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு பூசாராதனை இடம்பெற்ற பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் உள்வீதி உலா வந்த பின், அழகிய மயில்வாகனத்தில் வெளிவீதி உலா எழுந்தருளுவார்.
தொடர்ந்து ஆலய வாசலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வுடன் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
எம்பெருமான் அடியவர்கள் திருக்கார்த்திகை தீப உற்சவத்தைக் காண ஆலயத்திற்கு வருகை தந்து, வள்ளி, தேவசேனா சமேத முருகையாவைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யும் வண்ணம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உபயம் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு
நிர்வாக சபையினர்