நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 22-07-2024ம் திகதி திங்கட்கிழமை கதிர்காம தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்று மு.ப. 10.30 மணியளவில் வழமை போன்று மூலவருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சிறப்பு பூஜாராதனை இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து நண்பகல் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜை நடைபெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் எம்பெருமான் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து ஆலய திருமடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.
அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து கதிர்காம தீர்த்த உற்சவத்தில் கலந்துகொண்டு அருள்மிகு முருகையாவைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
உபயம் – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா
நிர்வாக சபையினர்