எதிர்வரும் 29-01-2025 புதன்கிழமை தை அமாவாசை தினமாகும். இதே நாளில் தான் அம்மன் அபிராமி பட்டருக்கு பௌர்ணமியாக காட்சி கொடுத்தார். அன்று தான் அபிராமி பட்டரினால் அபிராமி அந்தாதி பாடப்பட்டது.
தை அமாவாசை நாளன்று பிற்பகல் 3.00 மணியளவில் காளியம்மனுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து ஆலய ஓதுவார்களினால் அபிராமி அந்தாதி பாடல்கள் முற்றோதல் செய்யப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்.
அடியார்களே! இச் சிறப்பு வாய்ந்த தை அமாவாசை நாளில் காளியம்மனுக்கு நடைபெறவுள்ள அபிஷேகம், விஷேட பூஜை மற்றும் அபிராமி அந்தாதி முற்றோதல் நிகழ்வுகளை கண்டு தரிசித்து காளியம்மனின் திருவருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
உபயம் – ந. மயூரன் – லண்டன்
நிர்வாக சபையினர்