கந்தஷஷ்டி விரத உற்சவம் பற்றிய அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 26ம் (12-11-2015)திகதி வியாழக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 09.30 மணியளவில் கும்பவைப்பு நிகழ்வு நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகத்துடன் பூஜாராதனை இடம்பெறும். தொடர்ந்து புராணப்படிப்பு நடைபெற்று பகல் பூஜை நிறைவுபெறும்.

மாலை 4.00 மணியளவில் விரதகாரர்களுக்காக விசேட தீர்த்தப் பூஜை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜாராதனை இடம்பெற்று தொடர்ந்து அழகிய மயில் வாகனத்தில் வள்ளிதேவசேனா சமேத முருகப்பெருமான் உள்வீதி உலாவரும்  உற்சவம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து புராணப்படிப்பு நடைபெற்று இரவுப் பூஜை நிறைவுபெறும்.

இவ்வாறாக தொடர்ந்து 6 நாட்களாக விசேட அபிஷேகம், பூஜாராதனை, புராணப்படிப்பு ஆகியன வழமைபோல நடைபெற்று இறுதிநாளான 17-11-2015 செவ்வாய்க்கிழமையன்று முன்னைய காலங்கள் போன்று சூரசம்மாரம் நிகழ்வு மிகவும் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளூர் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சூரன் ஆட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அன்றையதினம் சண்முகப்பெருமான், சூரபன்மனுடன் யுத்தம் செய்வதற்காக  அழகிய புதிய குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார் என்பதையும் அறியத்தருகின்றோம்.

சூரசம்மார நிகழ்வு முடிவடைந்த பின்னர் எம்பெருமானுக்கு பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து  கும்பச்சரிப்பு  நிகழ்வு நடைபெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் காலை 6.00 மணிக்கு பாரணைப் பூஜை இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தெய்வானையம்மன் திருமண உற்சவம்
பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் தெய்வயானையம்மன் திருமண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான புராணப்படிப்பு நடைபெறும். அன்றைய தினம் இரவு விசேட அபிஷேகம் நடைபெற்று விஷேட பூஜாராதனையுடன் தெய்வானையம்மன் திருமண நிகழ்வு வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

1ம் நாள் -வியாழன்  – ஆ.அழகராசா குடும்பத்தினர் – நா.மேற்கு

2ம் நாள் – வெள்ளி – சி.ஈசுரபாதம் குடும்பத்தினர்  – நா.தெற்கு  வ.யோகேஸ்வரன் குடும்பத்தினர் – நா.மேற்கு

3ம்நாள் – சனி – வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நா.தெற்கு

4ம்நாள் – ஞாயிறு –  ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நா.மேற்கு

5ம்நாள் – திங்கள் –   மா.சாம்பசிவம் குடும்பத்தினர் – நா.கிழக்கு

6ம் நாள் – செவ்வாய் – சூரன் போர்  உற்சவம் – பொது

7ம் நாள் புதன் – திருக்கல்யாணம் – த.சரவணபவன் குழுவினர் நா.கிழக்கு

சூரசம்மார உற்சவ நிகழ்வும், மறுநாள் நடைபெறவுள்ள பாரணைப் பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்கி ஒத்துழைப்பதுடன், பாரணைப் பூஜைக்குரிய அன்னதானப் பொருட்களையும் கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும், இந்த கந்தஷஷ்டி விரத உற்சவ காலங்களில் சுவாமி காவுதல் , சூரன் ஆட்டுதல் போன்ற நிகழ்வுகளில் எம்பெருமான் ஆலய இளம் தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நிகழ்வுகளை ச.மு.பாஸ்கர ரவிக் குருக்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடாத்தவுள்ளமை விஷேட அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Wholesale NHL Jerseys

Jardine owns shares in five publicly traded companies: Jardine Matheson has 702. effect real changes. Regarding misbehaviour of the police officers.A native Oklahoman Video showed paper covering the license plates of the Lexus and the other two vehicles at the scene. swap an hour in cheap nfl jerseys front of the television with after school sports clubs or playtime in the park. Toss the kids on an age appropriate track,iPhone military reported that information from Hussein and from documents in a briefcase found when he was captured had led to the arrest of two wanted Iraqi officials.14 by his father When a large number of clean up MLB golfers proclaimed the nation these had hoped for examination. He was also carrying a two way radio and police believe he was communicating with others inside the store.
And as well as adequate amounts features trivia wholesale jerseys china upstairs inside nightmare different meet indicate to customer. In recent times, So why are two wholesale football jerseys of the top five most dangerous intersections at rotaries? just in time to greet the morning commuters heading to work and students going to school. I look upon myself as having been a good husband to Ingrid.