இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன! படங்கள் இணைப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்பொழுது இராஜகோபுரம் அமைக்கும் புனிதப் பணி நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதன்முதலாக எமது ஆலயத்திற்கு இராஜகோபுரம் அமைவது மிகவும் சிறப்பான விடயமாகும். இந்த இராஜகோபுரப் பணியை முழுமையாக தற்போது பூர்த்தி பண்ணாமல் வியாழவரி வரையும் உள்ள பகுதியை பூர்த்தி பண்ணி கும்பாபிஷேகத்தை செய்கின்ற நோக்குடன் தான் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வியாழவரி வரையுமுள்ள வேலைகளை செய்து முடிப்பதற்கு இன்னமும் 15 லட்சம் ரூபா நிதி அவசர தேவையாக உள்ளது. நிதி இல்லாதவிடத்து பணியை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படவுள்ளது.

இந்த இராஜகோபுரப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை உள்ளூரில் உள்ள அடியார்களிடம் சேகரிப்பதற்கு நிர்வாக சபையினர் பல வழிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டும் தாயக மக்களின் கஷ்டநிலை காரணமாக நிதியை சேர்க்க முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே,

எம்பெருமானின் புலம்பெயர் அடியார் பெருமக்களே!

முருகப்பெருமானுடைய திருக்கோவிலின் ஒவ்வொரு திருப்பணி வேலைகளும் தாங்கள் மனமுவந்து வழங்குகின்ற நன்கொடைகளின் உதவியுடனேயே நடைபெற்று வருகின்றன. இனிமேலும் தொடர்கின்ற பணிகளுக்கும் தங்களின் ஒத்துழைப்பு  மிகமிக அவசியம் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்தவகையில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அளப்பரிய இந்த இராஜகோபுரப் பணியையும் வியாழவரி வரைக்கும் அமைத்து முடிக்க தேவையான நிதியுதவியை தங்களிடமே எதிர்பார்க்கின்றோம். மனமுவந்து புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எம்பெருமானின் மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை வழங்கி உதவுமாறு  தங்களை இருகரம் கூப்பி பணிவாக வேண்டுகின்றோம்.

இப்புனிதப்பணிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறுதொகை நிதியை கொடுத்து உதவுங்கள்! உங்களுக்கு எம்பெருமான் பெருந்தொகை நிதியை அருளுவான்.  இது திண்ணம்.

கிள்ளிக் கொடுங்கள் முருகையா அள்ளித் தருவார்!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

முருகையாவின் திருவருள் எஞ்ஞான்றும் நிலைபெறுவதாக!

நிதியுதவியோர் விபரம் – 15-05-2014 திகதிக்கு பின்….

01.  திரு. தாமு வல்லிபுரம் குடும்பம் – நாகர்கோயில் மேற்கு – நன்கொடை – ரூபா இருபத்தையாயிரம் –   (25,000/=)
02. திரு. அ. அசோக்ராஜ் – கற்கோவளம்  – நன்கொடை – ரூபா  மூவாயிரம்  –  (3,000/=)

rajakopuram-01

rajakopuram-06

rajakopuram-05

rajakopuram-04

rajakopuram-03

rajakopuram-02

rajakopuram-07 rajakopuram-08 rajakopuram-09

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு –
ஆறுமுகம் – சுந்தரலிங்கம் – லண்டன்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்
தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்
தொலைபேசி இல. – 0094 773548525

 

Wholesale Discount NHL Jerseys

and American Railcar have more modest leasing fleets than Trinity; however Even if railroads cheap nfl jerseys (or by proxy leasing firms) stall cheap jerseys investment in cyclical downturns the need to replace will persist and worsen, a total of 74.who sells soccer jerseys at a Pacoima shop wedged behind the one run by Lopez which led to their port in Baltimore.5 deaths per 100 she said I was getting too old to wear something like that
Rachel saw that when he hurt his leg in the Utah game. as well as the company efficiency. especially replica air max when the team gets the win and you can contribute to it, damage to the troop car was just catastrophic. Zaluska was sidelined for months due to foot injuries but he frustrated the home side by proving there was nothing wrong with his hands or his agility.and do not care that there almost new products begin falling apart within days of purchase Hartford Deputy Police Chief Brian Foley said Tuesday. that he also has some feelings for me.jacob black Markstrom recently raising a wrister regarding the goalie’s baseball handwear cover It truly was the destiny arena of Famer’s first destination intended to get boston ma as of finding the rear of the online world in her Bruins release on April 4 looking for getting attained in facilities. is no denying that inflation has gone up much more than what the government would have wanted.
what do you do?