ஆலய புனரமைப்பு திருப்பணி! வரைபடங்களும் – மதிப்பீடுகளும்!

Alaya_amaippuதேவஸ்தான புனரமைப்பு வேலைத்திட்ட வரைபடங்களும் மதிப்பீடுகளும் விளக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு வரைபடம்

Alaya_amaippu

பாகசாலை – குருக்கள் அறை – களஞ்சிய அறை வரைபடம்

madappalli

மணிக்கூட்டுக்கோபுரம் மாதிரி வரைபடம்

mnikopuram

தம்ப மண்டபம் – வெளி மண்டபம் அலங்காரத் தூண் ஒன்றின் மாதிரி வரைபடம்

thun

பரிவாரங்களின் மாதிரித் தோற்றம் – வரைபடம்

vaitavar

 

அர்த்த மண்டபத்திற்கு மேல்வரும் கர்ண கூடு சாலை

karnakudu salai

வசந்த மண்டபம் முன்பக்க – பின்பக்கத் தோற்றம் வரைபடம்

vasantha manadabam front

vasantha mandabam back

வரைபடங்களை பெரிதாக்க பார்க்க வேண்டுமெனில் படத்தின் மீது வைத்து கிளிக் செய்யவும்.

புனரமைப்பு பணிகளுக்குரிய மதிப்பீடுகள்:-

1.  பிள்ளையார் பரிவாரம்:

ஸ்தூபி மற்றும் பாவைகள் கடந்த காலத்தில் சுண்ணாம்புக் கலவையினால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனால் அவைகள் முழுவதும் பழுதடைந்து விட்டது. அத்துடன் முன்பக்கம் இரு தூண்கள் அமைத்து மண்டபம் கூரை போட்டு ஓடு போட வேண்டும். பாவைகளும் அமைக்க வேண்டும்.

சாமான்கள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா மூன்று லட்சம் (300,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2. மணிக்கோபுரம்

முழுவதும் இடித்து புதிதாக அமைக்க வேண்டும்.

சாமான்கள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா எட்டு லட்சம் (800,000)

3. வைரவர் பரிவாரம்

முன்னர் முழுவதும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டதனால் புதிதாக அமைக்க வேண்டும்.

சாமான்கள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் (350,000)

4. தம்ப மண்டபம் – வெளி மண்டபம்

தூண்கள் முழுவதும் புதிதாக அமைத்து, வசந்த மண்டபம் பாகசாலை மற்றும் களஞ்சியம் அடங்கலாக இணைத்து ஒரே கூரை அமைத்து ஓடு போடப்படல் வேண்டும்.

ஒரு அலங்கார தூண் அமைக்க சாமான்கள் – கூலி – செலவுகள்: சுமார் ரூபா எண்பதினாயிரம். (80,000)

இரண்டு மண்டபங்களுக்கும் தூண்கள் – கூரை வேலைகள் சகலவற்றுக்கும் சுமார் ரூபா பதினைந்து லட்சம் (1500,000) தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

5. மயூர பலிபீடம்

கடந்த காலத்தில் சுண்ணாம்பினால் கட்டப்பட்டது. புதிதாக அமைக்கப்படல் வேண்டும்.

சாமான்கள் – கூலி – செலவுகள்: சுமார் ரூபா எழுபத்தைந்தாயிரம் (75,000)

6. வசந்த மண்டபம்

முழுவதும் இடித்து புதிதாக கட்டப்படல் வேண்டும். மேலே ஸ்தூபி அமைக்கப்படல் வேண்டும். பாவைகள் மற்றும் அலங்காரத் தூண்களும் அமைக்க வேண்டும்.

சாமான்கள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா பன்னிரண்டு லட்சம் (1200,000) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

7. அர்த்த மண்டபத்தில் வரும் பாவைகள்

கடந்த காலத்தில் சுண்ணாம்பினால் செய்யப்பட்டது. முழுவதும் பழுதடைந்து விட்டது. முன்னர் பின்பக்கம் திருவாசி அமைத்து செய்யவில்லை. தற்போது திருவாசி போட்டு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தெற்குப்பக்கம்: வள்ளி திருமணக்காட்சி
வடக்குப்பக்கம்: முருகன் – ஔவையார் – நாவல்பழம் உலுப்பும் காட்சி

இரண்டு பக்க பாவைகள் மற்றும் திருவாசி அமைத்து செய்யத் தேவையான பொருட்கள் – கூலி – சுமார் ரூபா மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம். (350,000)

8. ஐயனார் பரிவாரம்

புதிதாக அமைக்க வேண்டும். ஸ்தூபி மற்றும் பாவைகள் அமைய வேண்டும். அத்துடன் முன்பக்கம் இரு தூண்கள் அமைத்து கூரைபோட்டு ஒடு கவிழ்க்க வேண்டும்.

சாமான்கள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா ஐந்து லட்சம் (500,000) தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

9. காளி பரிவாரம்

புதிதாக அமைக்க வேண்டும். ஸ்தூபி மற்றும் பாவைகள் அமைய வேண்டும். அத்துடன் முன்பக்கம் இரு தூண்கள் அமைத்து கூரைபோட்டு ஒடு கவிழ்க்க வேண்டும்.

சாமானகள் – கூலி – இதர செலவுகள்: சுமார் ரூபா ஐந்து லட்சம் (500,000) தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

10. பாகசாலை (மடப்பள்ளி)

முழுவதும் இடித்து புதிதாக அமைக்கப்படல் வேண்டும்.

சாமான்கள் – கூலி  மற்றும் செலவுகள்: சுமார் ரூபா மூன்றரை லட்சம் (350,000) தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று களஞ்சியம் மற்றும் குருக்கள் அறைகள் ஒவ்வொன்றுக்கும் இதே மதிப்பீட்டுத் தொகையே கணிப்பிடப்பட்டுள்ளது.

 எம்பெருமான் அடியார்களே!

ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகள் சம்பந்தமாக இன்னமும் கூடிய விளக்கங்கள் தேவைப்படின் நிர்வாகசபை பொருளாளர் திரு. நாகதம்பி குமரேசு அவர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இதுவரை பொறுப்பேற்காத திருப்பணி புனரமைப்பு வேலைகளில் நீங்கள் விரும்புகின்றவற்றை பகுதியாகவும் செய்யலாம்.அல்லது குழுவாகவும் சேர்ந்து செய்யலாம்.

எம்பெருமானுடைய திருப்பணிகளை கூடிய விரைவில் ஆரம்பிக்க தங்களின் பேராதரவினையும், பூரண ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் நல்கியருளுமாறு வேண்டுகின்றோம்.

சித்திரை மாதம் முடிவடைவதற்குள் திருப்பணியை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் துணையுடன் உத்தேசித்துள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

திருப்பணி நிதி அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம் வருமாறு:

பெயர்:  நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
வங்கிக்கிளை – இலங்கை வங்கி, பருத்தித்துறை
கணக்கு இலக்கம் –  73515574

குறிப்பு: தாங்கள் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பியவுடன் நிர்வாகசபை பொருளாளருக்கோ அல்லது செயலாளருக்கோ அல்லது தலைவருக்கோ அல்லது நிர்வாகபை உறுப்பினர்களுக்கோ யாராவது ஒருவருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் தங்களின் பெயரில் பற்றுச்சீட்டு போடுவதற்கு இலகுவாக இருக்கும்.

வணக்கம்

“என்றென்றும் எம்பெருமான் திருவருள் நிலைபெறுவதாக!

 

Wholesale football Jerseys

Curry took the bus 3 at 10 within your third quarter. even if you irate with the latest reports from school. He can’t work because of this problem and he is on social security disablity.dude one can derive all sorts of interesting statistics about one’s motion. replica air max said yesterday maybe it’s time to unify behind Cruz.1 million in the 2014/15 season to $40 another replica oakleys sunglasses member. Raising all the bridges to allow access to taller boats would be financially formidable.
In other words. Superior Court Monday afternoon. How to kill termites Termites can do some serious damage to your home You likely will not experience extreme damage such as you will with The rest of the look is boxy and rugged.usually it implies that at some point both of you went your separate ways and with time the separation between the two of you was increasing even though all appeared to be just all right from your opinion I think she wanted to see my baby. about 10 percent of the voting population is denied the vote. she slapped me again and again. senior director of sales and marketing for gafas de sol ray ban the Bears. But on Tuesday.