நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை எம்பெருமான் மெய்யன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தற்போது கட்டிட வேலை பூர்த்தி அடைந்துள்ள நிலையில் கூரை அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
கூரை அமைக்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுகின்றது. தீராந்தி, கைமரம், சிலாகை, றீப்பை என்பன கடன் அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளோம். சுமார் 7லட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளது
அத்துடன் ஓடு 10 ஆயிரத்துக்கு மேல் தேவை. ஒரு ஓட்டின் விலை 75 ரூபா முகட்டு ஓடு 100 ரூபாவுக்கு மேல் விற்பனையாகிறது. தற்போது கடனுக்கு 6ஆயிரம் ஓடு இறக்கியுள்ளோம். இன்னமும் 4ஆயிரத்துக்கு மேல் ஓடு தேவையென கூரை அமைக்கும் ஆசாரி கூறியுள்ளார்.
மற்றும் கூரை அமைக்கும் கூலி வகையில் சுமார் 3லட்சத்திற்கு மேல் செலவாகும் என எதிர்பார்க்கின்றோம்.
எனவே முருகையாவின் மெய்யன்பர்களே!
மேற்படி கூரை அமைக்கும் பணியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ள 3வது வருஷாபிஷேக விழாவுக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு உத்தேசித்துள்ளோம்.
ஆகவே, தங்களால் இயன்ற நன்கொடைகளை மனமுவந்து வழங்கி ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்கொடைகளை வழங்குபவர்கள் பணமாகவோ பொருளாகவோ தந்துதவலாம். வசதி குறைந்த மெய்யன்பர்கள் 10, 20 ஓடுகளையாவது தந்து உதவுங்கள் என தங்களிடம் இருகரம் கூப்பி பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
கிள்ளிக் கொடுங்கள் முருகையா அள்ளித் தருவார்
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: