நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 3வது வருஷாபிஷேக மணவாளக்கோல விழா எதிர்வரும் ஆவணி மாதம் 21ம் (06-09-2018) திகதி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் பகல் நிகழ்வாக,சுமார் 10 மணியளவில், மூல மூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத முருகையாவுக்கு நவோத்தர சகஸ்ர (1009) சங்காபிஷேகமும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு ஸ்நபனாபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து விஷேட மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை ஆராதனைகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது..
அதனைத் தொடர்ந்து ஆலய திருமடத்தில் அன்னதானம் இடம்பெறும்.
மாலை நிகழ்வாக சுமார் 6.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று, விஷேட மங்கள நாதஸ்வர கானங்கள் ஒலிக்க, எல்லாம் வல்ல அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத முருகையா சுவாமி உள்வீதி உலா நடைபெற்று, தொடர்ந்து மின்சார தீபங்களால் அலங்கரிக்கப் பெற்ற விசேட பூந்தண்டிகையில் வெளிவீதி உலா வரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், இளநீர், மற்றும் பூஜைக்குரிய பூக்கள் என்பவற்றுடன் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின் தீய வினைகளைப் போக்கி சிறப்புடன் வாழ முருகையாவின் நல்லருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அன்றைய தினம் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு அடியார்களினால் மனமுவந்து அளிக்கப்பட்ட நிதியுதவியுடன் புதிதாக செய்யப்பட்ட தங்க நகைகள் அணியப்படும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
உபயங்களைப் பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்
01. நவோத்தர சகஸ்ர (1009) சங்காபிஷேகம் – உபயம் – பொது
02. விசேட மேளக்கச்சேரி – உபயம் – ஆ.அழகராசா குடும்பம் – லண்டன்
03. ஆலய அலங்காரம் – உபயம் – கண்ணையா – பாஸ்கரன் – சுவிஸ்
04. அன்னதானம் – உபயம். – சி – ஜெயக்குமார் குடும்பம் – சுவிஸ்.
05.சாத்துப்படி – உபயம் – ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
06. பூந்தண்டிகை – உபயம் – திரு பா.அருள்தரன் குடும்பம் – சுவிஸ்
07. ஒலி, ஒளி அமைப்பு – உபயம் – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா
விசேட குறிப்பு
எம்பெருமானின் 3வது மணவாளக்கோல விழாவுக்குரிய தனிப்பட்ட உபயங்களைப் பொறுப்பேற்றுள்ள மெய்யடியார்கள் தேவஸ்தான நிர்வாக சபையினருடன் தொடர்பு கொண்டு தங்களது உபயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
முருகையா அடியார்களே!
இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
குறிப்பு
முருகையாவின் பெண் அடியார்கள் வீதி துப்புரவு பணியிலும் ஆண் அடியார்கள் சுவாமி காவுதல், தீபங்கள், பாத்திரங்கள், குடங்கள் விளக்குதல் போன்ற சரீரத் தொண்டுகளிலும் தவறாது பங்குபற்றி, ஒத்துழைப்பு நல்கி எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 634 3649
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
ப. அருள்தாஸ் – உபசெயலாளர் – 0094 77 324 0457
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
ப. ஐங்கரன் – உறுப்பினர் – 0094 77 517 3572
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465
ந. செல்வராசா – உறுப்பினர் – 0094 77 453 5592
ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு