மண்டலாபிஷேக பூர்த்தி(சங்காபிஷேகம்) விழா!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் ஆவணி மாதம் 07ம் நாள் (24-08-2019) சனிக்கிழமையன்று மகா கும்பாபிஷேகத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மூலவருக்கு நவோத்தர சகஸ்ர (1009) சங்காபிஷேகமும் மற்றைய பரிவார தெய்வங்களுக்கு ஸ்நபனாபிஷேகமும் இடம்பெறும்.தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று நண்பகல் ஆலய திருமடத்தில் நிகழும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்)யுடன் பகல் நிகழ்வு நிறைவுபெறும்

மாலை நிகழ்வாக 5.00மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகையா, காளிகாம்பாள் ஆகிய மூன்று சுவாமிகளும் அழகிய பூந்தண்டிகையில் வெளிவீதி உலா வரும் உற்சவம் நடைபெறவுள்ளது.

மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், இளநீர், மற்றும் பூஜைக்குரிய பூக்கள் என்பவற்றுடன் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின் தீய வினைகளைப் போக்கி சிறப்புடன் வாழ முருகையாவின் நல்லருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும், அன்றைய தினம் பகல் நிகழ்வான சங்காபிஷேகம், சிறப்புப் பூஜை என்பன பொது உபயமாக நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வின் ஒரு அம்சமான அன்னதானம் மற்றும் மாலை நேர நிகழ்வுகள் யாவும் தனிப்பட்ட உபயங்களாக இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கீழ் குறிப்பிடப்படும் உபயங்கள் கடந்த காலங்களில் தனிப்பட்ட உபயங்களாக இடம்பெற்றுள்ளன.

01. அன்னதானம் – சி.ஜெயக்குமார் – சுவிஸ்
02. விஷேட மேளம் – ஆ.அழகராசா குடும்பம் – லண்டன்
03. மாலை,யாகப் பந்தல்,வெள்ளை அலங்காரம் – க.பாஸ்கரன் -சுவிஸ்
04. ஒலி,ஒளி அமைப்பு – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
05. பூந்தண்டிகை – ஆ. சிவானந்தராசா (அவுஸ்.) கொடுக்கிளாய், ஆழியவளை
06. வள்ளி தேவசேனா சமேத முருகையா சாத்துப்படி – ஏ.கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு
07. விநாயகர் சாத்துப்படி – கி.சிவசாமி குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
08. காளிகாம்பாள் சாத்துப்படி – க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை

முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவுக்குரிய தனிப்பட்ட உபயங்களை மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அடியார்களும்  பொறுப்பேற்றுள்ளனர்.

அதேவேளை, பொது உபயமான சங்காபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

குறிப்பு
உள்ளூரில் உள்ள பெண் அடியார்கள் எம்பெருமான் ஆலய வீதி துப்புரவு பணியிலும் ஆண் அடியார்கள் சுவாமி காவுதல், தீபங்கள், பாத்திரங்கள், குடங்கள் விளக்குதல் போன்ற சரீரத் தொண்டுகளிலும் தவறாது பங்குபற்றி, ஒத்துழைப்பு நல்கி எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813

தொடர்புகளுக்கு

நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465

ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு